Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மறுசீராய்வு ஊராட்சி வார்டுகளில் புதிய வாக்காளர் பட்டியல்

மறுசீராய்வு ஊராட்சி வார்டுகளில் புதிய வாக்காளர் பட்டியல்

மறுசீராய்வு ஊராட்சி வார்டுகளில் புதிய வாக்காளர் பட்டியல்

மறுசீராய்வு ஊராட்சி வார்டுகளில் புதிய வாக்காளர் பட்டியல்

ADDED : ஜூலை 11, 2011 09:49 PM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊராட்சிகளில் மறுசீராய்வு செய்த வார்டுகள் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.தமிழகத்தில், இன்னும் ஓரிரு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.

இதையொட்டி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் ஓட்டு பெட்டிகள், தேர்தல் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் மறுசீராய்வு செய்த வார்டுகள் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை கொண்டு புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணியை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அந்தந்த வார்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.மறுசீராய்வு செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஒன்றிய அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.வளர்ச்சி பணிகளில் தீவிரம்: உள்ளாட்சி தேர்தல் நெருங்கவுள்ளதால், தேர்தலுக்கு முன் ஊராட்சிகளில் நிலுவையிலுள்ள வளர்ச்சி பணிகள் குறித்த இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஏற்கனவே டெண்டர் விட்டு நிறைவு பெறாமல் உள்ள பணிகளை ஆய்வு விரைவில் முடிக்க ஒன்றிய அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யாமல் இழுத்தடிக்கும் ஒப்பந்தாரர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.அந்தந்த ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி பணிகளை வேகப்படுத்த ஊராட்சி தலைவர்களும் அக்கறை செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. மணல் தட்டுப்பாடு காரணமாக தடைப்பட்டிருந்த வளர்ச்சி பணிகள் மீண்டும் துவங்கியுள்ளதுன. இம்மாத இறுதிக்குள் 90 சதவீத பணிகள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us