/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அமைப்புகள் தூண்டுதலில் குறைதீர் கூட்டத்தில் மனு : கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்அமைப்புகள் தூண்டுதலில் குறைதீர் கூட்டத்தில் மனு : கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
அமைப்புகள் தூண்டுதலில் குறைதீர் கூட்டத்தில் மனு : கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
அமைப்புகள் தூண்டுதலில் குறைதீர் கூட்டத்தில் மனு : கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
அமைப்புகள் தூண்டுதலில் குறைதீர் கூட்டத்தில் மனு : கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட் கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கிராம பகுதி மக்களை அழைத்து வந்து சில அமைப்புகள் புகார் கொடுப்பது அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் பெரும்பாலும் மக்கள் படிப்பறிவு இல்லாத கிராம மக்களாக உள்ளனர். கிராம மக்கள் மனுக்களை எப்படி கொடுப்பது என தெரியாமல் திணறி வருவதோடு, கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் படிப்பறிவு இல்லாத கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தின் வெளியில் பணம் வாங்கி கொண்டு மனுக்கள் எழுதி கொடுப்பவர்களை நாடி செல்கின்றனர். இதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இலவசமாக மனு எழுதி கொடுக்க ஏற்பாடுகள் செய்திருக்கும் நிலையில் கிராம மக்கள் அது குறித்து அறியாமல் பணம் கொடுத்து மனு எழுதி கொடுப்பவர்கள் மத்தியில் சிக்கி கொள்கின்றனர்.
இதே போன்று கிராம பகுதியில் படிப்பறிவு இல்லாதவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் புற்றீசல் போல் துவங்கப்பட்டு, பிரச்னைகள் குறித்த மனுக்களை தயார் செய்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கு உதவுவது போல் ஏமாற்றி கிராம மக்களிடம் ஒரு தொகையை கறந்து வருகின்றனர்.
சமீப காலமாக நிலப்பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்து படிப்பறிவு இல்லாதவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மனுக்களை தயார் செய்து கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டங்களில் கொடுப்பது அதிகரித்து வருகிறது. இன்னும் சில அமைப்புகள் கிராம மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அங்குள்ள சிறு பிரச்னைகளுக்கு கூட பெரிதாக்கி மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வருகின்றனர். இதில், பாதிக்கப்படும் நபர்களை மிரட்டி பணம் பறிப்பதும் அதிகம் நடந்து வருகிறது. இது போன்ற மனுக்கள் மீது விசாரணை நடத்தும் போது, அதிகாரிகள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண உள்ளூர் பிரச்னைகள், முன் விரோத பிரச்னைகள் உள்ளிட்டவைகளை கூட நேரடியாக கலெக்டர் பார்வைக்கு கொண்டு வருவதோடு, உள்ளூர் அதிகாரிகளையும் மனு கொடுப்பதாக மிரட்டி வரும் சம்பவம் அதிகம் நடந்து வருகிறது.
மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்கள் அறியாமையால் இது போன்ற அமைப்புகளில் பிடியில் சிக்கி ஏமாறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்களின் பின்னணியில் செயல்படும் அமைப்புகள் குறித்து போலீஸார் மூல ம் கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


