ADDED : செப் 25, 2011 01:42 AM
விழுப்புரம்:தமிழ்நாடு அரசு இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர், மருத்துவ
உதவியாளர் நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட செய்தி
மக்கள் தொடர்பு அலுவலக செய்திக் குறிப்பு:தமிழக அரசு இலவச ஆம்புலன்சில்
பணி புரிய ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு நேர்காணல் முகாம்
விழுப்புரம் எம்.கே.மகாலில் நாளை 26ம் தேதி நடப்பதாக அறிவித்திருந்தனர்.
தேர்தல் விதிமுறை நடத்தை காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் முகாம் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.