மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்
மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்
மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்
ADDED : செப் 13, 2011 03:46 AM
நாகர்கோவில் : மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு மேலும் ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்த தி.மு.க. அரசில் சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். தி.மு.க. வை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அஜிதா- வுக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்வது தொடர்பாக தயாசிங் என்பவரை மிரட்டியதாக சுரேஜ்ராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் உத்தரவு பெற்று, நாகர்கோவில் கோர்ட்டில் ஜாமீன் பெற்றார். களியக்காவிளையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் ஜெ., பற்றி அவதூறு பேசியதாக இவர் மீது களியக்காவிளை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இரண்டு முறை மாவட்ட கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றிருந்த இவர் குழித்துறை கோர்ட்டில் சரணடைந்தார். தினமும் நாங்குனேரி போலீஸ் ஸ்டேஷனில் காலை 10 மணிக்கு கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.