Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கருணாநிதியின் பணக்கனவு பலிக்கவில்லை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி

கருணாநிதியின் பணக்கனவு பலிக்கவில்லை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி

கருணாநிதியின் பணக்கனவு பலிக்கவில்லை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி

கருணாநிதியின் பணக்கனவு பலிக்கவில்லை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி

ADDED : செப் 03, 2011 02:41 AM


Google News
கடையநல்லூர்:சட்டசபை தேர்தலில் கருணாநிதியின் பணக்கனவு பலிக்காமல் போய்விட்டதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறியிருப்பதாவது:-தமிழக அரசு கேபிள் டிவி குறைந்த கட்டணத்தில் அனைத்து பிரிவினருக்கும் கேபிள் இணைப்பு வழங்கியிருப்பது சாதாரண மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் அதிமுக அளித்த வாக்குறுதிகள் எல்லாம் கடுமையான நிதி நெருக்கடி இருந்தபோதிலும் முதல்வர் ஜெயலலிதாவால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை முதல் குமரி வரை கடந்த திமுக ஆட்சியில் மண்டலம் வாரியாக நில அபகரிப்புகளை திமுகவினர் தான் மேற்கொண்டுள்ளனர் என்பது தற்போது போலீசாரால்மேற்கொள்ளப்பட்டு வரும் கைது நடவடிக்கையில் பகிரங்கமாக தெரியவந்துள்ளது. இந்த செயல்பாட்டில் தான் திமுகவினர் சாதனையை செய்துள்ளனர். மற்றபடி மக்களுக்கான எந்த நலன்களையும் அவர்கள் எண்ணத்திலும், கருத்திலும் கொள்ளவில்லை என்பது இதன்மூலம் நிருபணமாகிவிட்டது.

நில அபகரிப்பு மூலமாக பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் செய்து அதன் மூலம் நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவர் கருணாநிதி இதனை நெருக்கடி காலம் என புலம்பி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிகளவில் இந்த செயலில் திமுகவினர் தான் ஈடுபட்டுள்ளனர் என்பது மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கடந்த ஆட்சியில் தமிழக கஜானாவையும் காலி செய்துவிட்டபோதிலும் தற்போதைய அதிமுக அரசு மக்கள் நலன் கருதி மக்கள் நலனுக்காக திட்டங்களை அறிவித்தும், செயல்படுத்தியும் வருகிறது.கடந்த சட்டசபை தேர்தலில் எப்படியாவது பணத்தை வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்துவிடலாம் என பல்வேறு பணக்கனவு கண்ட கருணாநிதியின் கனவு பலிக்காமல் போய்விட்டது. மக்கள் மிகுந்த விழிப்புடனும், ஆர்வத்துடன் அதிமுகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். அதனை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவால் தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் தற்போது கேபிள் டிவி திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அமைச்சருடன் மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், கடையநல்லூர் தொகுதி இணை செயலாளர் நடராஜன், வக்கீல் ஐயப்பராஜா, குட்டியப்பா, செங்கோட்டை குருசாமி, இளைஞர் பாசறை ராஜேஷ்வரன், நகர செயலாளர்கள் தங்கவேலு, கிட்டுராஜா, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us