ADDED : ஆக 22, 2011 10:58 AM
கரூர்: கரூர் அருகே பஸ்சில் 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் புனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். அவரது மனைவி ராஜலட்சுமி (25). இவர் இன்று திருச்சியிலிருந்து கோவை நோக்கிச் சென்று பஸ்சில் கொண்டிருந்த போது, சாப்பாட்டிற்காக பஸ் கரூரில் நிறுத்தப்பட்டது. சாப்பாட்டிற்காக ராஜலட்சுமி கீழே இறங்கிய போது, அவர் வைத்திருந்த பெட்டி திருடுபோனது. அதில் 6 பவுன் நகை மற்றும் துணிகள் இருந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.