Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நாராயணன் நகர் ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி வார்த்தல் விழா

நாராயணன் நகர் ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி வார்த்தல் விழா

நாராயணன் நகர் ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி வார்த்தல் விழா

நாராயணன் நகர் ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி வார்த்தல் விழா

ADDED : செப் 11, 2011 10:58 PM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் நாராயணன் நகர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப் பூர கஞ்சி வார்த்தல் மற்றும் பால் அபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி காலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை, காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அம்மன் உருவப்படம் வீதியுலா நடந்தது. அக்கினிச்சட்டி மற்றும் கஞ்சி கலயங்களை எடுத்தபடி 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். திரு.வி.க., வீதி, நேருவீதி, பூந்தோட்டம் வழியாக கஞ்சி கலய ஊர்வலம் வந்த பின் கோவிலில் பகல் 11 மணிக்கு கஞ்சி வார்த்தல் நடந்தது. பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு நடந்த பாலாபிஷேகத்தை கலெக்டர் மணிமேகலை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஜெயபாலன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். சக்தி பீட பொறுப்பாளர்கள் மணிவாசகம், தேவராஜ், குருசந்திரன், ராஜம்மணியம்மாள், திலகவதி, வேள்விக்குழு பாலசுப்பிரமணியம், மாணிக்கம், சங்கரி, சாந்தி செய்திருந்தனர். முன்னாள் தலைவர் பழனிசாமி, வட்ட தலைவர் கருணாமூர்த்தி, துணைத் தலைவர் மருதப்பன், செயலாளர் இன்பசேகரன், பொருளாளர் கந்தவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us