கோபிசெட்டிபாளையம்: கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகளும்
பெண்கள் மேம்பாடும் என்ற தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம்
நடந்தது.கருத்தரங்கில் செயலாளர் சரவணகுமார் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர்
செல்லப்பன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேராசிரியை பாருல்
பட்நாகர் கலந்து கொண்டு பேசினார். ஆட்சிக்குழு தலைவர் கருப்பண்ணன், தாளாளர்
நடராஜன் மற்றும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த
100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.