ADDED : செப் 25, 2011 12:46 AM
ஈரோடு: பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது.ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், பரதநாட்டியம், கிராமிய நடனப்போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை, ஓவியம், குரலிசை, இசைக்கருவி மீட்டல், வினாடி வினா போட்டி, ஆங்கில கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடந்தது.
324 பேர் கலந்து கொண்டனர். அறிவியல் ஆய்வு கண்காட்சியில் 406 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. மேட்டுநாசுவம்பாளையம் யூனியன் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ப்ருதிவிராஜ், வசந்த்குமார் ஆகியோரது, 'இயற்கை விவசாயத்தில் அறிவியலின் பங்கு' என்ற படைப்பு முதல்பரிசு பெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.