Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தமிழகம் முழுவதும் களத்தில் உள்ளோம்: பிரேமலதா பெருமிதம்

தமிழகம் முழுவதும் களத்தில் உள்ளோம்: பிரேமலதா பெருமிதம்

தமிழகம் முழுவதும் களத்தில் உள்ளோம்: பிரேமலதா பெருமிதம்

தமிழகம் முழுவதும் களத்தில் உள்ளோம்: பிரேமலதா பெருமிதம்

ADDED : அக் 07, 2011 01:22 AM


Google News
கள்ளக்குறிச்சி : தமிழகம் முழுவதும் தேர்தல் களத்தில் தே.மு.தி.க., மட்டுமே உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.கள்ளக்குறிச்சி பகுதி தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: நமது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் கள்ளக்குறிச்சியின் முக்கிய பிரச்னையான சங்கராபுரம், கச்சிராயபாளையம், சின்னசேலம் சாலைகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 'ரிங் ரோடு' அமைத்து தருவோம்.

அடிப்படை வசதிகளைச் சரி செய்ய உழைப்போம். நகராட்சி, பேரூராட்சியில் நிலவும் கொசு போன்ற தீய சக்தியான ஊழலை அகற்றுவோம். ஆட்சியாளர்களை தவிர வேறு யாராவது தேர்தலில் வெற்றி பெற்றால் கிடைக்க வேண்டிய இலவச திட்டங்கள் நமக்கு கிடைக்காமல் போய் விடும் என்ற பயம் உங்களிடம் உள்ளது. இலவச திட்டங்கள் அனைத்தும் அரசு பணத்தில் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் அரசின் இலவச திட்டத்தைப் பெற்று தருவது நமது வேட்பாளர்களின் பணியாகும். விஜயகாந்த் சொந்த பணத்தின் மூலம் பல நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். இங்கு நமது கட்சியில் போட்டியிடும் அனைவரும் இளைஞர்கள், இவர்களுக்கு ஊழல் என்பது தெரியாது அப்போது தான் நகராட்சி முன்னேற்றம் அடையும். நமக்கு தேவையானவைகள் அனைத்தும் சரி செய்து தரப்படுமா, கள்ளக் குறிச்சி நகரம் முன்னேற்றம் அடையுமா என சரியான முறையில் சிந்தித்து நமது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள். தி.மு.க.,, மற்றும் அ.தி.மு.க.,வை தட்டி கேட்க ஆளில்லாத போது லகான் போட்டு அடக்க வந்தவர் கருப்பு எம்.ஜி.ஆரான நமது விஜயகாந்த். லஞ் சம், ஊழலை ஒழிப்பேன் என்று சொன்ன ஒரே தலைவர் விஜயகாந்த் தான். ஊழல் இல்லாத நல்ல ஆட்சியை தருவேன் என கூறும் விஜயகாந்த் ஏன் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்திருந்தார். இப்போது மா.கம்யூ.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறார் என நினைக்க வேண்டாம். தேவையா, உடனடி தேவையா என பார்த்த போது, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது உடனடித் தேவை யாக இருந்தது. எனவே தி.மு.க.,வை ஆட்சியிலிருந்து அகற்ற அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்தார். தே.மு.தி.க., வின் கூட்டணி எப்போதும் தெய்வத்துடனும் மக்களுடனும் தான், தற்போது மா.கம்யூ., ஊழல் குற்றச்சாட்டு இல்லாத கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துள்ளோம். தமிழகம் முழுவதும் தேர்தல் களத்தில் தே.மு.தி.க., மட்டுமே உள்ளது. ஓட்டளிப்பதில் கவனமாக இருங்கள். வெற்றிக்கு பிறகு சந்திப்போம். இவ்வாறு பிரேமலதா பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us