ADDED : ஆக 29, 2011 10:09 PM
கடலூர் : கடலூர் சி.கே.பள்ளியில் ஆசிரியர்களுக்கான கோலப் போட்டி நடந்தது.
கடலூர் சி.கே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் கோலப் போட்டி நடந்தது. ஒரு குழுவிற்கு 6 ஆசிரியர்கள் வீதம் 7 குழுவாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. பள்ளி இயக்குனர் சந்திரசேகரன் போட்டியை துவக்கி வைத்தார். இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவிகள் மணிமாலா தெய்வசிகாமணி, ரமாதேவி மகேந்திரன், சி.கே., பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் கஜலட்சுமி, பெட்ரீஷியஸ் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர். அடுத்த வாரம் வாலிபால், கட்டுரைப் போட்டி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பரிசு வழங்கப்படும் என பள்ளி முதல்வர் தார்ஷியஸ் கூறினார்.