Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சார்பதிவாளர் அலுவலகத்தில் முக்கிய ஆவணம் "மிஸ்சிங்'

சார்பதிவாளர் அலுவலகத்தில் முக்கிய ஆவணம் "மிஸ்சிங்'

சார்பதிவாளர் அலுவலகத்தில் முக்கிய ஆவணம் "மிஸ்சிங்'

சார்பதிவாளர் அலுவலகத்தில் முக்கிய ஆவணம் "மிஸ்சிங்'

ADDED : செப் 17, 2011 09:50 PM


Google News

காரைக்குடி : காரைக்குடி செஞ்சை பத்திர பதிவு அலுவலகத்தில் 'நில வழிகாட்டி பதிவேடு' காணாமல் போனதையடுத்து பத்திர பதிவு நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செஞ்சை, முத்துப்பட்டணத்தில் பத்திர பதிவு அலுவலகங்கள் உள்ளன.

நிலங்களுக்கான பத்திர பதிவு, நில குத்தகை அடமான பத்திரம், திருமண பதிவு நடைபெறுகின்றன. குன்றக்குடி, இலுப்பக்குடி, சங்கராபுரம் ஊராட்சி என 120 கிராமங்களும், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட சில வார்டுகளும் செஞ்சை பத்திர பதிவு அலுவலகத்திற்குட்பட்டது. கிராமத்திற்கு ஏற்றவாறு இட மதிப்பீடை அறிய இங்கு 'கைடு லைன்ஸ் வேல்யூ' (நில வழிகாட்டி பதிவேடு) இருக்கும். இதை தெரிந்து கொண்டு பத்திரம் மற்றும் பதிவு கட்டணங்களை மக்கள் கணக்கிடுவர். இதில், சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட நில வழிகாட்டி பதிவேடு சில நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டது. இதனால், அப்பகுதி மக்கள் நிலங்களை விற்க முடியாமலும், அவசர நேரங்களில் அடமானம் வைக்க முடியாமலும் பரிதவிக்கின்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், '' அலுவலகத்தில் புரோக்கர்கள், பத்திர எழுத்தர் உதவியாளர்கள் தொந்தரவு உள்ளது. சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட நில வழிகாட்டி பதிவேடு காணாமல் போனது உண்மை தான். இதனால் அப்பகுதியில் பத்திர பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இடமதிப்பீடு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் தற்போது பதிவு நடைபெறுகிறது. மேலும், பேரூராட்சி, ஊராட்சி, தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக 'கைடு லைன்ஸ் வேல்யூ' தொங்கவிடப்பட்டிருக்கும். செஞ்சை பத்திரவு அலுவலகத்தில் டேபிள்களின் மீது போடப்பட்டதால், காணாமல் போய்விட்டது'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us