/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஸ்டாலின் கைதை கண்டித்து மறியல் மாவட்டத்தில் தி.மு.க.,வினர் கைதுஸ்டாலின் கைதை கண்டித்து மறியல் மாவட்டத்தில் தி.மு.க.,வினர் கைது
ஸ்டாலின் கைதை கண்டித்து மறியல் மாவட்டத்தில் தி.மு.க.,வினர் கைது
ஸ்டாலின் கைதை கண்டித்து மறியல் மாவட்டத்தில் தி.மு.க.,வினர் கைது
ஸ்டாலின் கைதை கண்டித்து மறியல் மாவட்டத்தில் தி.மு.க.,வினர் கைது
ADDED : ஜூலை 31, 2011 03:07 AM
விழுப்புரம் : ஸ்டாலின் கைதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.திருவாரூரில் தி.மு.க.
பொருளாளர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால் நேற்று மதியம் 1 மணியளவில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி வீட்டு முன்பு தி.மு.க.,வினர் குவிந்தனர். பின்னர் பொன்முடி தலைமையில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, ராதா மணி, சேர்மன்கள் ஜனகராஜ், ராஜா, சம்பத் உட்பட கட்சியினர் ஊர்வலமாக புதுச்சேரி சாலைக்கு வந்தனர். இதனால் புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் 1 மணி முதல் 1.40 மணி வரை போக்குவரத்து பாதித்தது. காந்தி சிலை அருகே முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட 120 பேரை டி.எஸ்.பி.,சேகர் தலைமையிலான போலீசார் கைது செய்து மதியம் 2.30 மணிக்கு விடுவித்தனர். கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க., ஒன்றிய சேர்மன் வெங்கடாசலம், நகர செயலாளர் கென்னடி தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், அங்கையற்கண்ணி தலைமையிலும் இரு பிரிவுகளாக மறியலில் ஈடுபட்ட 97 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.ஒலக்கூர் கூட்ரோடில் முன்னாள் சேர்மன் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் கலைவாணி சரவணன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
செஞ்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், அண்ணாதுரை, நகர செயலாளர் வக்கீல் காஜாநஜீர் உட்பட 12 பேர் செஞ்சி கூட்ரோட்டில் சாலையில் உட்கார்ந்து மறியல் செய்தனர்.