ADDED : ஆக 16, 2011 11:18 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா நேற்று முன்தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம்: ராஜா தினகர் ஆர்.சி., தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில், சுங்கத்துறை ஆய்வாளர் ஜான் பிரிட்டோ கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் அருள்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை ஆரோக்கிய மேரி நன்றி கூறினார்.
* செயின்ட் சேவியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், ராஜாராம் பாண்டியன் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் ஏஞ்சல் பிரேமா, ஆசிரியர்கள் சரண்யா, அழகேஸ்வரி பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புல்லங்குடி ஊராட்சி தலைவர் முனீஸ்வரன் கொடியேற்றினார். முதல்வர் அமானுல்லா ஹமீது, அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா, செல்லத்துரை அப்துல்லா, துறை தலைவர்கள் கனகவல்லி, பாலாஜி, சாகுல்ஹமீது, சபியுல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.
* உத்தரகோசமங்கை அரசு மேல்நிலை பள்ளியில் ஊராட்சி தலைவர் உத்தண்டவேலு கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் முகம்மது அப்பாஸ், ஆசிரியர் மதியழகன், பால்பாண்டி, சத்தியேந்திரன், கார்த்திகை செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கீழக்கரை: மேதலோடை நாடார் மகாஜன சங்க உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சத்திய சேகரன் தலைமையில் உறவின் முறை தலைவர் நவநீதன் முன்னிலையில் ஊராட்சி தலைவர் முத்தம்மாள் கொடியேற்றினார். பள்ளி கமிட்டி உறுப்பினர் திலகராஜ் சமாதான புறாவை பறக்கவிட்டார்.
அறிவியல் ஆசிரியர் பெருமாள் நன்றி கூறினார்.
* கீழக்கரை ஹமீதியா மேல் நிலைப்பள்ளியில் தாளாளர் யூசுப் சாஹிப் கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார். ஆசிரியர் மகபூப் பாதுஷா, மாணவர் சதீஸ்லிங்கம் சுதந்திர தின உரையாற்றினர்.
* கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியில் தாளாளர் ஹமீது சுல்த்தான் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி வரவேற்றார். சட்ட ஆலோசகர் அப்துல் சர்தார் கொடி ஏற்றினார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை மேரி ஜெனட் நன்றி கூறினார்.
* மாயாகுளம் லிட்டில் ஸ்டார் பிரைமரி, நர்சரி பள்ளியில் மாயாகுளம் ஜமாத் பொருளாளர் முகம்மது அலியார் முன்னிலையில் தாளாளர் பால்ராஜ் தலைமையில் ஓய்வு ஆசிரியர் ராஜப்பா கொடியேற்றினார்.
* மாயாகுளம் நாடார் மகாஜன சங்க சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளியில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கொடியேற்றினார்.பள்ளியில் கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் நன்றி கூறினார்.
*மாயாகுளம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் தெய்வகனி கொடி ஏற்றினார். ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், உதவி தலைவர் சிவக்குமார், ஊராட்சி உதவியாளர் உதயகுமார் மற்றும் கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
* ஏர்வாடி ஊராட்சியில் தலைவர் குணசேகரன் கொடியேற்றினர். ஊராட்சி துணை தலைவர் செய்யது இபுறாகிம், ஊராட்சி உதவியாளர் அஜ்மல் கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* ஏர்வாடி எலைட் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஷேக் மஜீது தலைமையில் உதவி முதல்வர் வசந்தி கொடியேற்றினார். ஏர்வாடி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துல்கருணை பாட்சா கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர்கள் குயின் ஜாக்குலின் மேரி,ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கமுதி: கமுதி ஆயுதப்படை மைதானத்தில் டி.எஸ்.பி., சீனிவாச பெருமாள் தலைமையில் கொடியேற்றப்பட்டது. கமுதி கவுரவ தொடக்கப்பள்ளியில் செயலாளர் சேகர் கொடியேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை மாரிஸ்வரி, தொடக்கப்பள்ளி நிர்வாககுழு உறுப்பினர் ரகுபதி உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
*கமுதி கோட்டைமேடு இணைப்பு இல்லத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன் கொடியேற்றினார்.
ஆசிரியர் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவுரவ உயர்நிலைப்பள்ளியில் செயலாளர் சுப்பராயலு கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் பாலவேணி, டிரஸ்டி குமாரசாமி, ஆயர்ராமர், சுப்பையா, ரகுபதி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
*கமுதி நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் சின்ன உடப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் ஆதி கொடியேற்றினார். சங்க நிர்வாகிகள் சண்முராஜ்பாண்டியன், சேது பாண்டியன், வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* பாப்பனம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்விக்குழு தலைவர் சாந்தா கொடி÷ற்றினார். தலைமை ஆசிரியர் குணசேகரன், ஜோஸ்வா உட்பட பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்: மாரந்தை அரசு நடுநிலை பள்ளியில் ஊராட்சி தலைவர் மங்களேஸ்வரி தலைமையிலும், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மல்லிகா, துரைராஜ் முன்னிலையிலும் கொடியேற்றப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
* கீழமுந்தல் அரசு நடுநிலைபள்ளியில் ஒன்றிய கவுன்சிலர் நம்புராஜா தலைமையிலும், தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் முன்னிலையிலும் கொடியேற்றபட்டது.
ஆதங்கொத்தங்குடி தொடக்கபள்ளியில் ஊராட்சி தலைவர் சிவராமச்சந்திரன், மணலூர் தொடக்கபள்ளியில் ஊராட்சி தலைவர் அங்கமுத்து வள்ளிமயில் ஆகியோர் தலைமையில் கொடியேற்றபட்டது.
*ஆணைசேரி தொடக்கபள்ளி ஊராட்சி தலைவர் ஜெயக்கொடி, கீரனூர் தொடக்கபள்ளியில் தலைமை ஆசிரியர் சரஸ்வதி, சிறுகுடி ஊராட்சியில் பெருங்கருணை தொடக்கபள்ளியில் ஊராட்சி தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கொடியேற்றபட்டது.
* செய்யாமங்களம் தொடக்கபள்ளியில் மேலக்கொடுமலூர் ஊராட்சி தலைவர் சிவசுப்பிரமணியன், செல்வநாயகபுரம் மேல்நிலைபள்ளியில் ஊராட்சி தலைவர் காந்திராஜன், ஆத்திகுளம் தொடக்கபள்ளியில் ஊராட்சி தலைவர் வள்ளிமயில் ஆகியோர் தலைமையில் கொடியேற்றபட்டது.
* குமாரகுறிச்சி ஊராட்சி தொடக்க பள்ளியில் ஊராட்சி தலைவர் வேலம்மாள், காக்கூர் அரசு மேல்நிலைபள்ளியில் ஊராட்சி தலைவர் ராஜசேகர், மணலூர் ஊராட்சியில் தொடக்கபள்ளியில் ஊராட்சி தலைவர் அங்கமுத்து ஆகியோர் தலைமையில் கொடியேற்றபட்டது.
* பூக்குளம் சுன்னத் ஜமாத் சார்பில் தலைவர் ஜமால் தலைமையிலும், செயலாளர் அப்துல் லத்தீப் முன்னிலையிலும் கொடியேற்றபட்டது.
பூக்குளம் பள்ளிவாசல் பேஸ் இமாம் சாகுல் ஹமீது கலந்து கொண்டனர்.