/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி வேண்டும்: இ.கம்யூ., தீர்மானம்அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி வேண்டும்: இ.கம்யூ., தீர்மானம்
அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி வேண்டும்: இ.கம்யூ., தீர்மானம்
அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி வேண்டும்: இ.கம்யூ., தீர்மானம்
அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி வேண்டும்: இ.கம்யூ., தீர்மானம்
ADDED : செப் 16, 2011 12:00 AM
பெரம்பலூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர், வேப்பூர் ஒன்றிய குழு கூட்டம் பெரம்பலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு நகர செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். பகுதிக்குழு செயலாளர் ஞானசேகரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, இளமுருகு, பொன்னுசாமி, ராமராஜ், ஜீவாதங்கராசு, ஆறுமுகம், வீரமுத்து, சம்பத், தியாகராஜன் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வேணுகோபால் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிடுவது. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பணியாற்றுவது. பெரம்பலூர் நகராட்சி பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். காவிரி குடிநீர் தினமும் விநியோகம் செய்ய வேண்டும். கீழப்பெரம்பலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அகரம்சீகூர் கிழக்குப்பகுதியில் பகுதி நேர அங்காடி அமைக்க வேண்டும். நன்னை நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பெரம்பலூரிலிருந்து எறையூர் வழியாக பெருமத்தூர் வரை இயக்கப்படும் டவுன்பஸ் வேப்பூர் வரை நீட்டிக்கப்படவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


