ADDED : செப் 11, 2011 11:04 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் என்.பி.
ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மன்றத் துவக்க விழா மற்றும் தொழிற்கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நடந்தது. மதுரைக் கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் மயில்முருகன், இந்திய நிறும செயலாளர் நிறுவனத்தின் தென் மண்டல உதவித் தலைவர் குமாரராஜன் கலந்து கொண்டனர். என்.பி.ஆர்., கல்விக் குழும செயல் அதிகாரி அழகப்பன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார். வணிகவியல் கம்ப்யூட்டர் பயன்பாட்டுத் துறை தலைவர் சிங்காரவேலு வரவேற்றார்.