கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ., பாரபட்சம் : ஜாமின் பெறவிடாமல் தடுப்பதாக தி.மு.க., குற்றச்சாட்டு
கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ., பாரபட்சம் : ஜாமின் பெறவிடாமல் தடுப்பதாக தி.மு.க., குற்றச்சாட்டு
கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ., பாரபட்சம் : ஜாமின் பெறவிடாமல் தடுப்பதாக தி.மு.க., குற்றச்சாட்டு

கோவை : '2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ஜாமினில் வெளிவருவதை தடை செய்யும் உள்நோக்கத்துடன், சி.பி.ஐ., பாரபட்சமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தீர்மான விவரம்: நாடாளுமன்ற குழுக்கள், இந்திய தலைமை தணிக்கை அதிகாரி குறிப்பிட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்ற கருத்தியலான இழப்பு குறித்தும், இது தொடர்பாக மற்றைய விவரங்கள் குறித்தும் விசாரித்துக் கொண்டிருக்கின்றன. அலைக்கற்றை ஒதுக்கீடு அரசாங்க கொள்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதா அல்லது தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டதா என்பதற்கான விடை இன்னும் தெளிவாகாத சூழ்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு உள்ளது.
இது வேறு; இந்த பிரச்னைக்கு சற்றும் தொடர்பில்லாத 'கலைஞர் தொலைக்காட்சி' நடத்திய கொடுக்கல், வாங்கல் போன்ற கடன் பிரச்னைகள் வேறு - அவை அனைத்தும் காசோலை வாயிலாகவே நடைபெற்று வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப்பட்டவையாகும். ஆனால், அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 விழுக்காடு பங்குக்கு உரியவர் என்ற முறையில், அதை ஒரு குற்றமாக கற்பித்து, கனிமொழியும், நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமினில் வருவதைக்கூட இந்திய புலனாய்வுத்துறை கடுமையாக ஆட்சேபித்து, இத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பது, இயற்கை நியதிக்கும், நியாயங்களுக்கும், இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கும் புறம்பானது.
'ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்காத வரை அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கக்கூடாது' என்ற கருத்தை, மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்@டார் தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, 'குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்பது சி.பி.ஐ., எண்ணமா' என்று எச்சரிக்கையே விடுத்திருக்கிறார்.
மத்திய புலனாய்வுக்குழு, கனிமொழி ஜாமினில் வெளிவருவதை தடை செய்யும் நடவடிக்கை, ஏதோ உள்நோக்கத்தோடு கூடிய பாரபட்சமான நடவடிக்கை என்றே பொதுக்குழு கருதுகிறது.