ADDED : செப் 21, 2011 11:15 PM
புவனகிரி:புவனகிரி அரிமா சங்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம், கரைமேடு அப்துல்
கலாம் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.அரிமா சங்கத் தலைவர்
முரளி தலைமை தாங்கினார்.
ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கிருஷ்ணன் முன்னிலை
வகித்தார். அப்துல் கலாம் நற்பணி மன்றத் தலைவர் குப்புசாமி வரவேற்றார்.
ஆர்.டி.ஓ., இந்துமதி ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.