/உள்ளூர் செய்திகள்/திருச்சி/போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 13, 2011 01:04 AM
திருச்சி: பரமக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பேர்
பலியானதைக் கண்டித்து திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்களும்,
வக்கீல்களும், கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இமானுவேல் சேகரன்
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர்
ஜான்பாண்டியன் ராமநாதபுரம் மாவட்டம் வருவதை போலீஸார் பாதுகாப்புக்காக
தடுத்துள்ளனர். இதையறிந்த அவரது ஆதரவாளர்கள் பரமக்குடியில் கலவரத்தில்
ஈடுபட்டனர். அப்போது, ஜான்பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும்
ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், ஆறு பேர்
உயிரிழந்தனர். போலீஸ் தரப்பில் பலரும் காயமடைந்தனர். கலவரத்தைக்
கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கி சூடுக்கு தமிழகத்தின் பல்வேறு
அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பரமக்குடியில் போலீஸார்
நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்ததைக் கண்டித்து
திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள், நேற்று காலை ஆர்ப்பாட்டம்
நடத்தினர். அதேபோல், மாவட்ட நீதிமன்றம் முன் வக்கீல்களும் போலீஸாரின்
துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது,
போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதேபோல், ஜங்ஷன் காதிகிராஃப்ட் அருகே புதிய தமிழகம் கட்சியினர், துப்பாக்கி
சூடு நடத்திய போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.