மகன் இறந்ததால்அதிர்ச்சியில் தாய் பலி
மகன் இறந்ததால்அதிர்ச்சியில் தாய் பலி
மகன் இறந்ததால்அதிர்ச்சியில் தாய் பலி
ADDED : ஜூலை 28, 2011 02:47 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே மகன் இறந்ததால், அதிர்ச்சியடைந்த தாயும்
இறந்தார்.கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையை சேர்ந்தவர் முருகன் (35).
மின்வாரியத்தில் அலுவலராக பணி புரிந்து வந்த அவர், நேற்று முன்தினம் மாலை 5
மணியளவில் இறந்தார்.அதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாய் சம்பூர்ணம் மயங்கி
கீழே விழுந்தார். நேற்றிரவு 3.30 மணியளவில், சம்பூர்ணமும் பரிதாபமாக
உயிரிழந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல், அதிர்ச்சியில் தாயும் இறந்த
சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.