Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உயர்நிலைப் பள்ளிகளாக18 பள்ளிகள் தரம் உயர்வு

உயர்நிலைப் பள்ளிகளாக18 பள்ளிகள் தரம் உயர்வு

உயர்நிலைப் பள்ளிகளாக18 பள்ளிகள் தரம் உயர்வு

உயர்நிலைப் பள்ளிகளாக18 பள்ளிகள் தரம் உயர்வு

ADDED : ஆக 19, 2011 03:51 AM


Google News
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 18 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சண்முகம் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் 18 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இதன்படி திம்மச்சூர், கீழத்தாழனூர், சோழவாண்டிபுரம், கோணை, காரை, மேல்பாப்பாம்பாடி, ஆசூர், பழையனூர், உலகலாபுரம், கீழ்மாம்பட்டு, பள்ளியந்தூர், ஆயந்தூர், கைப்பானிக்குப்பம், அத்தியூர் திருவாதி, க.அலம்பலம், நொச்சலூர், நாரணமங்கலம் ஆகிய நடுநிலை பள்ளிகளும், நிறைமதி ஆதிதிராவிடர் நல நடுநிலை பள்ளி உள்ளிட்ட 18 பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வித்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us