/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சொத்து பிரச்னையில் மகனை கொன்ற தந்தைசொத்து பிரச்னையில் மகனை கொன்ற தந்தை
சொத்து பிரச்னையில் மகனை கொன்ற தந்தை
சொத்து பிரச்னையில் மகனை கொன்ற தந்தை
சொத்து பிரச்னையில் மகனை கொன்ற தந்தை
ADDED : ஜூலை 27, 2011 01:26 AM
திண்டுக்கல்: சொத்து பிரச்னையில் மகனை கொன்ற தந்தை தலைமறைவானார்.
உறவினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே நாகநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வக்குமார் (35). சில தினங்களுக்கு முன், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே போடிகாமன்வாடி குளத்தில், கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். சொத்து பிரச்னையால் செல்வக்குமாரை, அவரின் தந்தை ராமசாமி உட்பட உறவினர்கள் கொலை செய்தது தெரிந்தது.உறவினர்கள் பாண்டியராஜன்(38), தெய்வேந்திரன் (32), மனைவி அன்புக்கனி (27), பெரியமுனுசாமி (62), செல்வக்குமாரின் தந்தை ராமசாமி மீது போலீசார் வழக்கு பதிந்தனர். ராமசாமி தலைமறைவானார்; மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்