திருச்சி இடைத்தேர்தலில் போட்டியில்லை: வைகோ
திருச்சி இடைத்தேர்தலில் போட்டியில்லை: வைகோ
திருச்சி இடைத்தேர்தலில் போட்டியில்லை: வைகோ
ADDED : செப் 09, 2011 10:23 AM
தஞ்சை: திருச்சி இடைத்தேர்தலில் ம.தி.மு.க.
போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். குடந்தையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வரும் உள்ளாட்சித்தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். தி.மு.க. , அ.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. முல்லைப்பெரியாறு, ஸ்டெர்லைட் பிரச்னைகளில் ம.தி.மு.க. உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களிடம் ம.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாது. இவ்வாறு வைகோ கூறினார்.