/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாநகராட்சியில் 9.91 லட்சம் வாக்காளர்கள்மதுரை மாநகராட்சியில் 9.91 லட்சம் வாக்காளர்கள்
மதுரை மாநகராட்சியில் 9.91 லட்சம் வாக்காளர்கள்
மதுரை மாநகராட்சியில் 9.91 லட்சம் வாக்காளர்கள்
மதுரை மாநகராட்சியில் 9.91 லட்சம் வாக்காளர்கள்
ADDED : செப் 20, 2011 02:10 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் 9.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, சட்டசபை தேர்தல் அடிப்படையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சரிபார்க்கும் பணியில் முடிவு தெரியவில்லை. ஒரு மண்டலத்தின் பட்டியல் மட்டும், சட்டசபை வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகாததால் மாலை வரை பணி தொடர்ந்தது. விரிவாக்கம் செய்த மாநகராட்சியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 91 ஆயிரத்து 504 பேர் என தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணைய இணையதளத்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மண்டலம் வாரியான வாக்காளர் எண்ணிக்கை விபரம் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. வாக்காளர் பட்டியல் நேற்று வெளியாகவில்லை. 'இன்று மாலை வெளியிட உள்ளதாக,' அதிகாரிகள் தெரிவித்தனர். விரிவாக்கத்தில் நிறைய வாக்காளர்கள் சேர்ந்துள்ளதால், முதற்கட்டமாக போட்டோ இல்லாத வாக்காளர் பட்டியல் வெளியிடுகின்றனர்.


