ADDED : ஆக 17, 2011 12:08 AM
நரிக்குடி : நரிக்குடி பகுதி மறையூர், வீரசோழன், கொட்டக்காச்சியேந்தல்,
தேளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை
பெய்தது.
தேளி கிராமத்தில் தங்கம் என்பவர் தொழுவத்தில் ஆடுகளை கட்டி அதற்கு
காவலாக அங்கேயே படுத்திருந்தார். பலத்த மழை காரணமாக இரவு 12 மணியளவில்
ஆட்டுக் கொட்டகை திடீரென்று சரிந்தது. இதில் இரண்டு ஆடுகள் நசுங்கி இறந்தன.
எட்டு ஆடுகள் காயமடைந்தன. மேலும் படுத்திருந்த தங்கம் சிறிய காயத்துடன்
உயிர் தப்பினார்.