/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வடலூர் குருகுலம் பள்ளியில் தாய்ப்பால் வார விழா ஊர்வலம்வடலூர் குருகுலம் பள்ளியில் தாய்ப்பால் வார விழா ஊர்வலம்
வடலூர் குருகுலம் பள்ளியில் தாய்ப்பால் வார விழா ஊர்வலம்
வடலூர் குருகுலம் பள்ளியில் தாய்ப்பால் வார விழா ஊர்வலம்
வடலூர் குருகுலம் பள்ளியில் தாய்ப்பால் வார விழா ஊர்வலம்
ADDED : ஆக 05, 2011 03:15 AM
குறிஞ்சிப்பாடி : வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் உலக தாய்ப்பால் வார
விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.வடலூர் டாக்டர் நா.மகாலிங்கம்
ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள்
பங்கேற்ற இந்த ஊர்வலத்தை ஓ.பி.ஆர்.
கல்வி நிறுவனங்கள் தாளாளர் செல்வராஜ்
துவக்கி வைத்தார்.வடக்குத்து ரோட்டரி சங்க தலைவர் பேராசிரியர் செல்வராஜ்,
நெய்வேலி ரோட்டரி தலைவர் அன்புகிளி, டாக்டர் சரவணன், இந்திய குழந்தைகள்
மருத்துவக்குழுமம் துணைத்தலைவர் உலகமதி செந்தில் ஆகியோர் ஊர்வலத்தை வழி
நடத்தினர்.வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் துவங்கி நகரின் முக்கிய
வீதிகள் வழியே சென்ற ஊர்வலத்தில் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள் பால்
கொடுக்க வேண்டும்.ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பாலுடன் இணை உணவு கொடுக்க
வேண்டும், மூன்று வயதுவரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் போன்ற வாசகங்கள்
அடங்கிய பதாகைகளை மாணவியர் ஏந்தி சென்றனர்.