Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பருவ மழையை நம்பி பணிகளை துவக்கிய விவசாயிகள் : பொட்டாஷ் உரமின்றி அவதி

பருவ மழையை நம்பி பணிகளை துவக்கிய விவசாயிகள் : பொட்டாஷ் உரமின்றி அவதி

பருவ மழையை நம்பி பணிகளை துவக்கிய விவசாயிகள் : பொட்டாஷ் உரமின்றி அவதி

பருவ மழையை நம்பி பணிகளை துவக்கிய விவசாயிகள் : பொட்டாஷ் உரமின்றி அவதி

ADDED : செப் 19, 2011 12:56 AM


Google News

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் பருவமழை மற்றும் வைகை அணை தண்ணீரை நம்பி விவசாய பணிகளை துவக்கிய விவசாயிகள், பொட்டாஷ் உரம் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

இப்பகுதிகளில் 7 ஆயிரம் ஏக்கரில் கடந்தாண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டது. சில நாட்களாக பெய்யும், மழையை நம்பி ஆர்வமுடன் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, கரப்பட்டி, வேடர்புளியங்குளம் பகுதிகளில் 200 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், மற்றவர்கள் சாதாரண முறையிலும் நெல் பயிரிட ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி வேளாண் அலுவலகங்களில் 30 டன்னுக்கும் மேற்பட்ட, விதை நெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொட்டாஷ் உரத்திற்கு தட்டுபாடு நிலவுகிறது.



தென்பழஞ்சி விவசாயி சிவராமன் கூறுகையில், ''பருவமழை துவங்கிய நிலையில், வைகை அணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு போக விவசாயத்திற்கு போதும். சென்றாண்டு பெய்த கன மழையால், மானாவாரி பகுதி நீர்நிலைகள், 42 ஆண்டுக்குப்பின் நிரம்பியதால், நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், மானாவாரி பகுதிகளிலும் 2 போகம் நெல் விளைவிக்க முடியும். பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லை. உரம் கிடைக்கவும், தற்போது விவசாயத்திற்கு இரவு நேரத்தில் 8 மணிநேரமும், பகல் நேரத்தில் 6 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதை பகலில் 10 மணிநேரம், இரவில் 6 மணிநேரமாக மாற்ற வேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறையில், மெஷின் நடவுக்கு ஏக்கருக்கு ரூ. 3,500 கொடுக்கிறோம். வேளாண் துறை மூலம் அரசு மெஷினை கொடுத்து, குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு கொடுக்கலாம், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us