/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கலைக்கப்பட்ட கோட்ட வளர்ச்சி அலுவலகம் புதிய அரசு மீண்டும் துவக்க எதிர்பார்ப்புகலைக்கப்பட்ட கோட்ட வளர்ச்சி அலுவலகம் புதிய அரசு மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு
கலைக்கப்பட்ட கோட்ட வளர்ச்சி அலுவலகம் புதிய அரசு மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு
கலைக்கப்பட்ட கோட்ட வளர்ச்சி அலுவலகம் புதிய அரசு மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு
கலைக்கப்பட்ட கோட்ட வளர்ச்சி அலுவலகம் புதிய அரசு மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 31, 2011 03:05 AM
பொள்ளாச்சி : தமிழகத்தில், 1961ம் ஆண்டு வரை ஊரக வளர்ச்சித்துறை,
வருவாய்த்துறையுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. அதன்பின், கிராமங்களை
மேம்படுத்தும் நோக்கில், வருவாய்த்துறையில் இருந்து ஊரக வளர்ச்சித்துறை
தனித்துறையாக உருவாக்கப்பட்டது. ஊரகப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை
ஆய்வு செய்யும் வகையில், 1974, ஏப்., முதல் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும்
இரண்டு முதல் மூன்று கோட்ட வளர்ச்சி அலுவலகங்கள் துவங்கப்பட்டன.ஒவ்வொரு
கோட்டத்திலும் கோட்ட வளர்ச்சி அலுவலரும், பல்வேறு பணியாளர்களும்
நியமிக்கப்பட்டனர். அந்தந்த கோட்டங்களுக்குட்பட்ட ஊராட்சிகளிலும்,
ஒன்றியங்களிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் கோட்ட வளர்ச்சி அலுவலகம் மூலம்
கண்காணிக்கப்பட்டது.அ.தி.மு.க., ஆட்சியில் கோட்ட வளர்ச்சி அலுவலகம்
மேம்படுத்தப்பட்டு, புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்மூலம் ஒன்றிய
பணியாளர்களின் பணிச்சுமை குறைந்தது. இந்நிலையில், கடந்த 1997ல் தி.மு.க.,
ஆட்சியில், கோட்ட வளர்ச்சி அலுவலகம் கலைக்கப்பட்டது.
கலைக்கப்பட்ட
அலுவலகத்திற்கு பதிலாக, மாவட்ட தலைநகரங்களில் ஊராட்சி உதவி இயக்குனர்
(பஞ்சாயத்து), ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை) என்ற தனிப்பிரிவு
ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தற்போது, ஒன்றியங்களில்
மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிகளுக்கும், துறை சார்ந்த ஆய்வு
கூட்டங்களுக்கும் ஒன்றிய அதிகாரிகள் அந்தந்த மாவட்ட தலைநகரிலுள்ள உதவி
இயக்குனர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலையுள்ளது.
ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கந்தசாமி, பொது
செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில், மாவட்டம் வாரியாக கோட்ட வளர்ச்சி அலுவலகம் துவங்கப்பட்டதால்,
பணியாளர்களுக்கு பல்வேறு வகையில் நன்மை கிடைத்தது; நிர்வாகமும் சீராக
இருந்தது. தற்போது, எந்த பணியாக இருந்தாலும் மாவட்ட தலைநகரங்களிலுள்ள உதவி
இயக்குனர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.மாவட்டத்தின் கடைக்கோடியில்
உள்ள பணியாளர், அதிகாரிகள், உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு செல்ல ஒரு நாள்
தேவைப்படுகிறது. இதனால், தினசரி பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட கோட்ட வளர்ச்சி அலுவலகங்களை
மீண்டும் துவங்கினால், ஊரக வளர்ச்சித்துறையில் பணிகளை விரைந்து
முடிக்கவும், நிர்வாகத்தை சீர்படுத்தவும் முடியும். பணியாளர்களுக்கு
பணிச்சுமை குறைவதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.இது குறித்து
முதல்வரிடமும், உள்ளாட்சித்துறை அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை கூட்ட தொடர் முடிந்தபின் அரசு இப்பிரச்னையில் நடவடிக்கை எடுப்பதாக
தெரிவித்துள்ளனர். அரசின் முடிவை எதிர்நோக்கி காத்துள்ளோம், என்றனர்.