நில மோசடி வழக்கு: மூன்று பேர் கைது
நில மோசடி வழக்கு: மூன்று பேர் கைது
நில மோசடி வழக்கு: மூன்று பேர் கைது
ADDED : செப் 21, 2011 01:09 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், நில மோசடி வழக்கில், மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.மும்பையை சேர்ந்தவர் சாரநாத்.
இவருக்கு, வண்டலூரில் 31 சென்ட் நிலம் உள்ளது. இதன் மதிப்பு 27 லட்சம் ரூபாய். இந்த நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த பத்மநாபன், 56, பாபு, 52, ஆகியோர், போலி ஆவணம் தயாரித்து அபகரித்துள்ளனர்.அதே போல், ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி கிராமத்தில், சிவக்குமார், சிவராமன் ஆகியோருக்கு சொந்தமான, 22 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன், 61, ஆக்கிரமித்துள்ளார்.இது குறித்த புகாரை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனவேல் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், தசரதன், பார்வதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து, நில மோசடியில் ஈடுபட்ட பத்மநாபன், பாபு, ஜெகதீசன் ஆகியோரை கைது செய்தனர்.