/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மீன்பிடி துறைமுகம்: அமைச்சர்கள் பார்வைமீன்பிடி துறைமுகம்: அமைச்சர்கள் பார்வை
மீன்பிடி துறைமுகம்: அமைச்சர்கள் பார்வை
மீன்பிடி துறைமுகம்: அமைச்சர்கள் பார்வை
மீன்பிடி துறைமுகம்: அமைச்சர்கள் பார்வை
கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட் மற்றும் மீன்பிடி துறைமுகத்தை அமைச்சர் ஜெயபால் பார்வையிட்டார்.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட், தேவனாம்பட்டினம் மீன் மார்க்கெட் ஆகியவை 1.47 கோடி ரூபாய் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டு, குளிர் சாதன வசதியுடன் மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட உள்ளது.இந்நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், அமலாக்கப் பிரிவு அமைச்சர் சம்பத், சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட், மீன் பிடி துறைமுகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.கலெக்டர் அமுதவல்லி, எம்.எல்.ஏ., க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன், பாலகிருஷ்ணன், கவுன்சிலர் கந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.அப்போது மீன் பிடி துறைமுகத்தில் மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.
முகத்துவாரத்தில் மேலும் 400 மீட்டர் தூரத்திற்கு கருங்கற்களை கொட்டி தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும்.உப்பனாற்றில் அக்கரை கோரியில் இருந்து சோனங்குப்பம் வரை ஆழப்படுத்த வேண்டும் என அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக மீனவர்களிடம் அமைச்சர் ஜெயபால் உறுதியளித்தார்.பரங்கிப்பேட்டை: அன்னங்கோயில் பகுதியில் 10 கோடியே 24 லட்சம் மதிப்பில் முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தும் பணி கடந்த 3 மாதத்திற்கு முன்பு துவக்கப்பட்டது. இப்பணியை ஆய்வு செய்த அமைச்சர்கள் ஜெயபால், சம்பத், செல்வி ராமஜெயம் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.கடல் நீர் வெள்ளாற்று பகுதிக்கு வராத வகையில் உடனடியாக தடுக்க வேண்டும். மானிய விலையில் டீசல் கிடைக்காமல் 20 கிராம மீனவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் மீனவர்கள் அமைச்சர்களிடம் புகார் தெரிவித்தனர்.மானிய விலை டீசல் கிடைக்கவும், கடல் தண்ணீர் வெள்ளாற்று பகுதிக்கு வராத வகையில் தடுக்க நடவடிக்க எடுக்கவும் அமைச்சர் ஜெயபால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அவருடன் கலெக்டர் அமுதவல்லி, மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன், முருகுமாறன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அருள், ஒன்றிய செயலர் சுப்ரமணியன், முன்னாள் ஒன்றிய செயலர் ரமேஷ், நகர செயலர் மாரிமுத்து உட்பட பலர் உடனிருந்தனர்.