/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வெளிமாநில இலவச வேட்டி, சேலைகொள்முதல்: தடைகோரி போராட்டம்வெளிமாநில இலவச வேட்டி, சேலைகொள்முதல்: தடைகோரி போராட்டம்
வெளிமாநில இலவச வேட்டி, சேலைகொள்முதல்: தடைகோரி போராட்டம்
வெளிமாநில இலவச வேட்டி, சேலைகொள்முதல்: தடைகோரி போராட்டம்
வெளிமாநில இலவச வேட்டி, சேலைகொள்முதல்: தடைகோரி போராட்டம்
ADDED : செப் 09, 2011 01:31 AM
திருச்செங்கோடு: 'வெளிமாநிலத்தில் இருந்து இலவச வேட்டி, சேலைகளை கொள்முதல்
செய்யக்கூடாது' என வலியுறுத்தி, தமிழ்நாடு நெசவாளர் சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில், திருச்செங்கோட்டில் உண்ணாவிரத போராட்டம்
நடந்தது.தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச வேட்டி, சேலைகள், நெசவாளர்
கூட்டுறவு சங்கங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நாமக்கல்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், திருச்செங்கோடு அதன் சுற்றுவட்டார
பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி உற்பத்தியாளர்கள், இலவச வேட்டி, சேலைகளை
நெசவு செய்து வந்தனர்.இதன்மூலம் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை கிடைத்து
வந்த நிலையில், 2012ம் ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலைகளை தயாரிக்க நிதி
ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து
கொள்முதல் செய்யப் போவதாக, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, சேலத்தில் கோ-ஆஃப்
டெக்ஸ் மேலாண் இயக்குனர் உமாசங்கர் அறிவித்தார்.அவரது இந்த அறிவிப்பால்,
நெசவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செங்கோடு பகுதி நெசவாளர்கள்,
தங்களது வாழ்வாதாரமாக இலவச வேட்டி, சேலை உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ளனர்.
நூல் விலை உயர்வு, மின் வெட்டு போன்ற பிரச்னைகளில் விசைத்தறி தொழில் செய்ய
முடியாமல் தவித்து வரும் நிலையில், கூலி உத்தரவாதம் என்பதால் இலவச வேட்டி,
சேலைகளை விசைத்தறியாளர்கள் நெசவு செய்து வந்தனர்.இந்நிலையில்,
வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்தால், பல ஆயிரம் குடும்பங்களின்
வாழ்க்கை பாதிக்கும்.
இத்திட்டத்தை அரசு கைவிட்டு, தமிழகத்திலேயே உற்பத்தி
செய்ய வேண்டும். நெசவுத்தொழில் நலிவடைந்துவரும் சூழ்நிலையில், இலவச வேட்டி,
சேலை உற்பத்தி மூலம் மட்டுமே நெசவுத்தொழில் மற்றும் அதை சார்ந்த
தொழிலாளர்கள் பயன்பெறுவர்.அக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு நெசவாளர்
சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்,
திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகில் நடந்தது.மாவட்டத்
தலைவர் பச்சியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் வைரவேல், பொருளாளர்
தெய்வானை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், திருச்செங்கோடு,
கைலாசம்பாளையம், குமரமங்கலம், சித்தாளந்தூர், கொல்லப்பட்டி, ஆண்டிபாளையம்,
தோக்வாடி, தேவனாங்குறிச்சி, கருவேப்பம்பட்டி, தண்ணீர்பந்தல்பாளையம்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்
பங்கேற்றனர்.


