Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கொலை வழக்கில்ஆயுள் தண்டனை ரத்து:ஐகோர்ட் உத்தரவு

கொலை வழக்கில்ஆயுள் தண்டனை ரத்து:ஐகோர்ட் உத்தரவு

கொலை வழக்கில்ஆயுள் தண்டனை ரத்து:ஐகோர்ட் உத்தரவு

கொலை வழக்கில்ஆயுள் தண்டனை ரத்து:ஐகோர்ட் உத்தரவு

ADDED : ஆக 23, 2011 04:55 AM


Google News
மதுரை:தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி.இவரது மனைவி பாக்யலட்சுமி.

இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். 2007 அக்டோபரில் ஏற்பட்ட தகராறில், மனைவிக்கு முத்துப்பாண்டி தீ வைத்தார். காயமுற்ற மனைவி இறந்தார். முத்துப்பாண்டிக்கும் காயங்கள் ஏற்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது.அதை எதிர்த்து முத்துப்பாண்டி, ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். அவரது சார்பில் வக்கீல் இ.சோமசுந்தரம் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஜி.எம்.அக்பர்அலி பெஞ்ச், ஆயுள் தண்டனையை ரத்து செய்தது. மனைவி இறப்புக்கு காரணமாக இருந்ததற்காக முத்துப்பாண்டிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us