தி.மு.க.,வில் இருந்து விலகினார் மாஜி எம்.எல்.ஏ.,: கட்சியின் நடைமுறையில் அதிருப்தி
தி.மு.க.,வில் இருந்து விலகினார் மாஜி எம்.எல்.ஏ.,: கட்சியின் நடைமுறையில் அதிருப்தி
தி.மு.க.,வில் இருந்து விலகினார் மாஜி எம்.எல்.ஏ.,: கட்சியின் நடைமுறையில் அதிருப்தி
ADDED : செப் 23, 2011 11:55 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகர், தி.மு.க.,வில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2006ல், அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகர், தி.மு.க.,வில் இணைந்து, பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
பொள்ளாச்சி தொகுதியில் எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தும், சீட் ஒதுக்கவில்லை. நகராட்சித் தலைவர் விருப்ப மனுவுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டதாக, தற்போது அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தி.மு.க.,வில் சேர்ந்ததால், குடும்ப பாசத்தோடு பழகி வந்த ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்களையும், பல்லாண்டுகளாக பழகி வந்த நண்பர்களையும் இழந்துள்ளேன். தி.மு.க.,வில் சேர்ந்ததே, என்னுடைய அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு என்பதை உணர்கிறேன்,'' என குறிப்பிட்டுள்ளார்.