ADDED : அக் 06, 2011 01:21 AM
பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே சொத்து தகராறு காரணமாக வாலிபரை
கட்டையால் தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சத்திரம்
அடுத்த சின்னாண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன், 36.
இவருக்கும் அவரது சகோதரர் பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக
முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பாண்டியனுக்கு ஆதரவாக அதே
பகுதியைச் சேர்ந்த பாலு, அர்ச்சுனன், ரங்கநாதன் ஆகியோர் காசி விஸ்வநாதனை
கட்டையால் தாக்கினர். காசிவிஸ்வநாதன் கொடுத்த புகாரின்பேரில்
புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் நாகூரான் வழக்குப்பதிந்து பாலு,
அர்ச்சுனன், ரங்கநாதனை தேடிவருகிறார்.


