/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பஸ் ஸ்டாண்ட் இருக்கு; ஆனா... பஸ் நிற்காதுபஸ் ஸ்டாண்ட் இருக்கு; ஆனா... பஸ் நிற்காது
பஸ் ஸ்டாண்ட் இருக்கு; ஆனா... பஸ் நிற்காது
பஸ் ஸ்டாண்ட் இருக்கு; ஆனா... பஸ் நிற்காது
பஸ் ஸ்டாண்ட் இருக்கு; ஆனா... பஸ் நிற்காது
ADDED : ஆக 01, 2011 10:42 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி பஸ் ஸ்டாண்டுக்கு, சில தனியார் பஸ்கள் வராததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளையம் அருகே, இந்திய அரசு அச்சகத்தை மையமாக கொண்டு பிரஸ்காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இதை சுற்றி ஜெ.பி. நகர், பாலாஜி கார்டன், சீனிவாச நகர், நந்தினி காலனி, வட்டப்பாறை, சக்திநகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு வீரபாண்டி பேரூராட்சி சார்பில் சில தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இரண்டு லட்ச ரூபாய் செலவில் பிரஸ்காலனியில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இப்பணிக்காக, 40 சென்ட் நிலத்தை இந்திய அரசு அச்சக நிர்வாகம் கொடுத்து உதவியது. ஆனால், இந்த புதிய பஸ் ஸ்டாண்டுக்கு சில தனியார் பஸ்கள் வராமல் பிடிவாதம் பிடிக்கின்றன. காந்திபுரம், ரயில் நிலையம் மற்றும் உக்கடம் பகுதியில் இருந்து பிரஸ்காலனியை இறுதி நிறுத்தமாக கொண்டு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் பிரஸ்காலனி வரை தனியார் பஸ்கள் இயக்கப்பட வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சில தனியார் பஸ்கள் ஆர்.டி.ஓ., உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, விட்டு பிரஸ்காலனிக்கு முந்தையான நிறுத்தமான வீரபாண்டி பிரிவுடன் திரும்பி சென்று விடுகின்றன. பிரஸ் காலனிக்கு பஸ் டிக்கட் பெற்ற பயணிகள் பலவந்தமாக வீரபாண்டி பிரிவில் இறக்கி விடப்படுகின்றனர். இதனால் பயணிகள் சுமார் இரண்டு கி.மீ., தூரமுள்ள வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டி உள்ளது. இரவு நேரத்தில் பெண்களும், குழந்தைகளும் இதே போல இறக்கி விடப்படுவது கொடுமை. இது குறித்து, இந்திய அரசு அச்சக தொழிலாளர்கள் அசோசியேஷனை சேர்ந்தவர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், சில தனியார் பஸ்களின் இந்த செயலால் வணிகர்கள், தொழிலாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுகின்றனர். தனியார் பஸ்கள், மீது உரிய நடவடிக்கை எடுத்து, பிரஸ்காலனி வரை பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.