ADDED : ஆக 11, 2011 11:08 PM
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அடுத்த சடையம்பட்டு காலனியை சேர்ந்தவர் சுப்ரமணியன்,45.
இவர் கடந்த 9ம் தேதி கள்ளக்குறிச்சியிலிருந்து மொபட்டில் வீட்டிற்கு சென்றார். சடையம்பட்டு பிள்ளையார் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம், மொபட் மீது மோதியதில் சுப்ரமணியன் இறந்தார். விபத்து குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


