/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கொட்டித் தீர்த்தது மழை ஆறாக மாறிய ரோடுகள்கொட்டித் தீர்த்தது மழை ஆறாக மாறிய ரோடுகள்
கொட்டித் தீர்த்தது மழை ஆறாக மாறிய ரோடுகள்
கொட்டித் தீர்த்தது மழை ஆறாக மாறிய ரோடுகள்
கொட்டித் தீர்த்தது மழை ஆறாக மாறிய ரோடுகள்
ADDED : ஜூலை 26, 2011 01:38 AM
ரோடு: ஈரோடு மாநகரில் நேற்று பெய்த கனமழையால், பெருந்துறை ரோடு, பிரப் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய ரோடுகள் ஆறாக மாறின.
ஈரோடு மாவட்டத்தில் ஒருமாதமாகவே, பகலில் கடுமையான வெயிலும், மாலை நேரத்தில் மேகமூட்டமுமாக காணப்பட்டது. பகலில் அதிகப்படியான வெயிலால், மாலையில் கண்டிப்பாக மழை பெய்யும் என, நினைத்த பொதுமக்களை, மழை பெரிதும் ஏமாற்றியது. நேற்று மாலை 3 மணிக்கு வானில் மேக மூட்டங்கள் சூழ்ந்தன. வழக்கம் போல ஏமாற்றி விடும் என, மக்கள் நினைத்தனர். ஆனால், 4.30 மணிக்கு நல்ல மழை பெய்ய ஆரம்பித்து, ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. பிரப் ரோடு, மேட்டூர் ரோடு, பஸ் ஸ்டாண்டு, பி.எஸ்.பார்க், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது. சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை திட்டக் குழிகளில் தண்ணீர் தேங்கியது. பிரப் ரோடு டெலிஃபோன் பவன் எதிர்புறம், குளம் போல தேங்கியது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். ரோட்டில் சாக்கடையுடன் மழைநீர் தேங்காதவாறு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.


