Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கலை இலக்கிய போட்டிகள்

கலை இலக்கிய போட்டிகள்

கலை இலக்கிய போட்டிகள்

கலை இலக்கிய போட்டிகள்

ADDED : ஜூலை 24, 2011 09:47 PM


Google News

கம்பம் : கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவை சார்பில் பேச்சு, பாடல், ஓவியப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டில் ஆகஸ்ட் 8 ல் நடக்கிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் போட்டிகளில் பங்கேற்கலாம். பேச்சு போட்டிகளில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'பாரதியும் தமிழும்', 9,10 வகுப்பு மாணவர்களுக்கு 'இமயமும் குமரியும்', 11,12 ம் வகுப்பினருக்கு 'வெற்றி நடைபோடும் இந்தியா', என்ற தலைப்புகளில் நடக்கிறது. 'பாரதியும் தாகூரும்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு, நடக்கிறது. இசைப் போட்டிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு, 9 முதல் 12 ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். ஓவியப்போட்டிகள், கவிதை போட்டிகள், நாட்டுப்புற நடனப் போட்டிகள் நடைபெறும். திரைப்படப்பாடல்கள் அனுமதிக்கப்படமாட்டது. ஆகஸ்ட் 6 க்குள் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பட்டியலை பள்ளிகள் அனுப்ப வேண்டும். இது தொடர்பான விளக்கங்களுக்கு தலைவர், பாரதி தமிழ் இலக்கிய பேரவை, கம்பம் என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பலாம், என, பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us