ADDED : ஆக 05, 2011 09:56 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:வன்னியம்பட்டி அருகே சென்னாக்குளத்திற்கு பள்ளி
நேரங்களில் அரசு பஸ் இல்லாததால், இலவச பஸ் பாஸ் கிடை த்தும், காசு கொடுத்து
தனியார், ஆட்டோக்களில் செல்லும் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.
வன்னியம்பட்டி அருகே சென்னாக்குளத்தில் ஆர்.கே., அரசு மேல்நிலை பள்ளி
உள்ளது. இப்பள்ளிக்கு சுற்று பகுதிகளான லட்சுமியாபுரம், துலக்கன்குளம்,
அழகு தெய்வேந்திரபுரம், கங்காகுளம், இனாம் கரிசல் குளம், பொட்டல்பட்டி,
பிள்ளையார்புரம், வேப்பங்குளம் உட்பட பத்துக்கும் அதிகமான
கிராமங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர்.
தற்போது பள்ளிகள் திறந்து அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால்
பள்ளி செல்வதற்கு வசதியாக காலை, மாலை நேரங்களில் பஸ்கள் இயக்காததால், அந்த
நேரங்களில் வரும் தனியார் பஸ்கள், ஆட்டோக்களில் பணம் கொடுத்து செல்ல
வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மாணவர்களது பெற்றோர்
பாதிக்கின்றனர்.வேப்பங்குளத்தை சேர்ந்த ராமர் கூறியதாவது: பள்ளி செல்ல,
மாலையில் வீடு திரும்பும் நேரங்களில் பஸ் வசதி இல்லாததால், மாணவர்களுக்கு
இலவச பஸ் பாஸ் இருந்தும் பணம் கொடு த்து பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலையில்
பெற்றோர் உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும்,
நடவடிக்கை இல்லை. பள்ளி நேரங்களில் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும், என்றார் .