/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் மாணவனுக்கு இலவச கல்விஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் மாணவனுக்கு இலவச கல்வி
ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் மாணவனுக்கு இலவச கல்வி
ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் மாணவனுக்கு இலவச கல்வி
ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் மாணவனுக்கு இலவச கல்வி
ADDED : ஆக 01, 2011 10:08 PM
திருப்பூர் : ஏழை மாணவன் இலவசமாக உயர்கல்வி பயில்வதற்கு ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை, அம்மாணவனிடம் கலெக்டர் மதிவாணன் வழங்கினார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவன் பொன்ராஜ், கட்- ஆப் 200க்கு 196 மதிப்பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக பொன்ராஜை உயர்கல்விக்கு அனுப்ப பெற்றோரால் முடியவில்லை. அம்மாணவன் உயர்கல்வி கற்க, செந்தில் வேலவன் அறக்கட்டளை மூலம் இயங்கும் ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனத்துக்கு கலெக்டர் மதிவாணன் பரிந்துரைத்தார்.தங்களது கல்லூரியில் பி.இ.,- இ.இ.இ., கல்வி இலவசமாக அளிக்க, அக்கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இலவச கல்வி பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் மதிவாணன் நேற்று வழங்கினார். ஜெய்ஸ்ரீராம் கல்லூரி தலைவர் தங்கராஜ், பொருளாளர் கோவிந்தசாமி, கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார் மற்றும் மாணவனின் பெற்றோர் உடனிருந்தனர்.