அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 28, 2011 02:03 AM
தர்மபுரி : காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
உதவி தலைமையாசிரியை மணிமேகலை பேரணியை துவக்கி வைத்தார். சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பேனர்களை மாணவர்கள் கையில் ஏந்தி நகரின் முக்கிய சாலை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர். ஆசிரியர்கள் நடராஜன், சக்திவேல், வீரமணி, தெய்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். * பாலக்கோடு டவுன் பஞ்சாயத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டியும், மருத்துவ முகாமில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், பகல் நேர பராமரிப்பு மையத்தில் சேர்க்க வலியறுத்தியும் நடந்த பேரணியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் அன்பழகன், கிராம கல்விக்குழு தலைவர் பத்தேகான் ஆகியோர் துவக்கி வைத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


