/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு டவுன் பஸ்சில்ரூ. 1.5 லட்சம் மாயம்நகை தொழிலாளி புகார்அரசு டவுன் பஸ்சில்ரூ. 1.5 லட்சம் மாயம்நகை தொழிலாளி புகார்
அரசு டவுன் பஸ்சில்ரூ. 1.5 லட்சம் மாயம்நகை தொழிலாளி புகார்
அரசு டவுன் பஸ்சில்ரூ. 1.5 லட்சம் மாயம்நகை தொழிலாளி புகார்
அரசு டவுன் பஸ்சில்ரூ. 1.5 லட்சம் மாயம்நகை தொழிலாளி புகார்
ADDED : செப் 12, 2011 03:17 AM
சேலம்: சேலத்தில், அரசு டவுன் பஸ்ஸில் வரும் போது, ஒன்றரை லட்சம் ரூபாய்
மாயமாகி விட்டதாக, நகை தொழிலாளி புகார் தெரிவித்துள்ளார்.சேலம்
அம்மாபேட்டை, பாலாஜி நகர், 4வது கிராஸில் வசிப்பவர் மகன் ராஜா (39). இவர்,
மேச்சேரியில், ராமன் என்பவருக்கு சொந்தமான நகைப்பட்டறையில், 7 ஆண்டாக வேலை
செய்து வருகிறார்.சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பெரியார் தெருவில், நகை
வியாபாரி பிரபாகரனிடம் நேற்று, 1.5 லட்சம் ரூபாயை வசூல் செய்த ராஜா, பணத்தை
ரெக்ஸின் பையில் வைத்து கொண்டு, காலை 11.30 மணியளவில் அரசு டவுன் பஸ்சில்
புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளார். அப்போது, பையில் வைத்திருந்த பணம்
மாயமாகி விட்டதாக, பள்ளப்பட்டி ஸ்டேஷனில் புகார்
தெரிவித்துள்ளார்.
போலீஸாரின் கேள்விக்கு, முன்னுக்கு பின் முரணாக
பதிலளித்தார். முதலில், ஒன்றரை லட்சம் ரூபாய் கொண்டு வந்ததாக தெரிவித்தவர்,
பிரபாகரன், வெள்ளை பேப்பரில் ரூபாய்களை மடித்து கொடுத்ததால், எவ்வளவு பணம்
இருந்தது என்று தெரியாது என, தெரிவித்தார்.தகவல் அறிந்து போலீஸ்
ஸ்டேஷனுக்கு வந்த, நகைப்பட்டறை உரிமையாளர் ராமன், தனியாக அழைத்து சென்று
ராஜாவிடம் விசாரித்தும் பலனில்லை. போலீஸார், தொடர்ந்து விசாரித்து
வருகின்றனர்.