Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சவுண்டப்பனுக்கு ஆதரவாகஅமைச்சர் தீவிர பிரச்சாரம்

சவுண்டப்பனுக்கு ஆதரவாகஅமைச்சர் தீவிர பிரச்சாரம்

சவுண்டப்பனுக்கு ஆதரவாகஅமைச்சர் தீவிர பிரச்சாரம்

சவுண்டப்பனுக்கு ஆதரவாகஅமைச்சர் தீவிர பிரச்சாரம்

ADDED : அக் 05, 2011 02:26 AM


Google News
சேலம்: அ.தி.மு.க., மேயர் வேட்பாளர், சவுண்டப்பனுக்கு ஆதரவாக, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, பொன்னையன் ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.சேலம் அ.தி.மு.க., மேயர் மேயர் வேட்பாளர் சவுண்டப்பனுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான பொன்னையன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான இடைப்பாடி பழனிசாமி, ஆகியோர் திறந்த வெளி ஜீப்பில் ஆதரவு திரட்டினர்.சேலம் மாநகர், மாவட்ட அ.தி.முக., செயலாளர் செல்வராஜ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடாசலம் ஆகியோரும், இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.கூட்டத்தில், பொன்னையன் பேசியதாவது:தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்து, ஏழை, எளியோர் பயன் அடைய வழிவகை செய்துள்ளார். லேப்டாப் கொடுத்து சாதனை படைத்துள்ளனர். மேலும், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை மக்களிடம் கொடுத்து பாராட்டு பெற்றுள்ளார்.

பொதுமக்கள் நில அபகரிப்பு வழக்கில், அவதி அடைந்துள்ளனர். இதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அ.தி.மு.க., பொது செயலாளரின் நல்லாட்சியில்தான், பொதுமக்கள் நிம்மதி அடைந்து எந்தவித அச்சமுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.சேலம் மேயராக சவுண்டப்பனை வெற்றி பெற செய்யுங்கள். அவர் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவார். நல்ல பல திட்டங்கள் கொண்டு வந்து சேலத்தை மாற்றி காட்டுவார்.இவ்வாறு பேசினார்.பிரச்சாரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், வக்கீல் அய்யப்பமணி, தொகுதி இணை செயலாளர் தியாகராஜன், வின்சென்ட் மாதேஸ்வரன், சண்முகம், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ்அப்பாத்துரை, சம்பு, சரவணன், மதலேனா, ஆதிமாதவன், முருகன், ராமன், சேட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us