Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/எம்.குமாரசாமி இன்ஜி., கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆண்டு விழா

எம்.குமாரசாமி இன்ஜி., கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆண்டு விழா

எம்.குமாரசாமி இன்ஜி., கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆண்டு விழா

எம்.குமாரசாமி இன்ஜி., கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆண்டு விழா

ADDED : செப் 13, 2011 12:58 AM


Google News
கரூர்: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற நான்காம் ஆண்டு விழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் துவக்கி வைத்து பேசியதாவது: மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவை வழிநடத்திச் செல்லக் கூடியவர்கள். நுகர்வோரை ஏமாற்றும் வகையில் செயல்படும் விற்பனை, விளம்பரம், தள்ளுபடி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தரத்தை கண்டறிந்து பொருட்களை பெறுவதில் நாம் கவனமாக செயல்பட வேண்டும். எந்த பொருள் வாங்கினாலும் பில் பெற வேண்டும். இழப்பு நமக்கும், அரசுக்கும், வணிகர்கள் பில் தரமறுத்தால் உரியதுறை அலுவலரிடம் புகார் செய்ய வேண்டும். பில் என்பது மிக முக்கியமானதாகும். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், நுகர்வோருக்கு பில்லே ஆயுதம்'. இவ்வாறு அவர் பேசினார். கேண்டில் டிரஸ்ட் செந்தில்குமார் பங்கேற்றார். முன்னதாக கல்லூரி மன்ற ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா வரவேற்றார். * கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற நான்காம் ஆண்டு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் அகிலா தலைமை வகித்தார். கரூர் ஆர்.டி.ஓ., சாந்தி பங்கேற்று குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் நுகர்வோர் பற்றி விளக்கி பேசினார். கரூர் வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் வாழ்த்தி பேசினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சங்கீதா வரவேற்றார். ஆசிரியர் சரண்யா நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us