/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு மாணவியர் விடுதி முன் கழிவுநீர் தேக்கம்அரசு மாணவியர் விடுதி முன் கழிவுநீர் தேக்கம்
அரசு மாணவியர் விடுதி முன் கழிவுநீர் தேக்கம்
அரசு மாணவியர் விடுதி முன் கழிவுநீர் தேக்கம்
அரசு மாணவியர் விடுதி முன் கழிவுநீர் தேக்கம்
ADDED : ஆக 14, 2011 10:32 PM
உடுமலை : உடுமலை அருகேயுள்ள அரசு மாணவியர் விடுதியின் முன்புறம் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுட்டு வருகிறது.உடுமலையிலிருந்து செஞ்சேரிமலை ரோட்டில் ஏரிப்பாளையம் அருகே அரசு மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.
உடுமலை பகுதியிலுள்ள பள்ளிகளில் பயில வெளியூர்களிலிருந்து வரும் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.விடுதியின் முன்பு போதிய பராமரிப்பு இல்லாதால், சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாணவியர் விடுதிக்கு முன்பு முட்செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. சாக்கடை நீர் விடுதிக்கு முன்பு குட்டை போன்று தேங்கியுள்ளது. இதனால், மாணவிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகின்றனர். பல நாட்களாக குட்டை போன்று விடுதி முன்பு தேங்கி கிடக்கும் சாக்கடை நீரினால், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உரிய அதிகாரிகள் இங்கு தேங்கியுள்ள சாக்கடை நீரை அகற்றவும், சுகாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.