/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விவசாய பணி துவங்குபோது டிராக்டர் ஜப்தி தடுத்து நிறுத்த இந்திய கம்யூ., வலியுறுத்தல்விவசாய பணி துவங்குபோது டிராக்டர் ஜப்தி தடுத்து நிறுத்த இந்திய கம்யூ., வலியுறுத்தல்
விவசாய பணி துவங்குபோது டிராக்டர் ஜப்தி தடுத்து நிறுத்த இந்திய கம்யூ., வலியுறுத்தல்
விவசாய பணி துவங்குபோது டிராக்டர் ஜப்தி தடுத்து நிறுத்த இந்திய கம்யூ., வலியுறுத்தல்
விவசாய பணி துவங்குபோது டிராக்டர் ஜப்தி தடுத்து நிறுத்த இந்திய கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஆக 15, 2011 02:19 AM
ஈரோடு: தமிழகத்தில் விவசாயிகளுக்கு தனியார் கம்பெனிகள், வங்கி கடன் மூலம் வழங்கிய டிராக்டர்களை, தற்போது விவசாய பணிகள் துவங்கும் வேலையில், கடனை காரணம் காட்டி, ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்க, தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம் துளசிமணி தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.பி., அப்பாதுரை பங்கேற்றார். தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு, சில தனியார் கம்பெனிகள், தானாக சென்று, வங்கிக்கடன் மூலம், சுலபத்தவணையில் டிராக்டர்களை வழங்கியது. விவசாயிகள் தங்கள் நிலத்திலும், வாடகைக்கு ஓட்டியும், கடனை கட்டமுடியாத நிலையில் ஏற்படுகிறது. தமிழகத்தில் டெல்டா பகுதிகள் மற்றும் மாவட்டம் தோறும் கடந்த சில மாதங்களில் நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபடத்துவங்கியுள்ளனர். ஆனால், டிராக்டர் விற்பனை செய்த தனியார் கம்பெனிகள், கடனை காரணம் காட்டி, வங்கி மூலமாக, டிராக்டர்களை ஜப்தியும், கடனுக்காக ஜாமின் வழங்கிய நிலங்களை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் காப்பாற்றியும், உணவு உற்பத்தியை சிதைத்து விடாமல் காத்திடவேண்டும். ஈரோடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர், செவிலியர், பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விபத்தில் அடிபட்டு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க, நரம்பியல் மற்றும் தலைப்பகுதிக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்களை உடன் நியமிக்க வேண்டும். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல கூடுதல் வாகனம் வழங்க வேண்டும். ஏற்கனவே உள்ள வாகனங்களை நன்கு பராமரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.