/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நான்குநேரி அருகே அனுமதியின்றி சாயப்பட்டறை அதிகாரிகள் தீவிர விசாரணைநான்குநேரி அருகே அனுமதியின்றி சாயப்பட்டறை அதிகாரிகள் தீவிர விசாரணை
நான்குநேரி அருகே அனுமதியின்றி சாயப்பட்டறை அதிகாரிகள் தீவிர விசாரணை
நான்குநேரி அருகே அனுமதியின்றி சாயப்பட்டறை அதிகாரிகள் தீவிர விசாரணை
நான்குநேரி அருகே அனுமதியின்றி சாயப்பட்டறை அதிகாரிகள் தீவிர விசாரணை
ADDED : ஜூலை 24, 2011 01:42 AM
நான்குநேரி : நான்குநேரி அருகே சிந்தாமணி பஞ்.,சில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் சாயப்பட்டறையில் அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.நான்குநேரி யூனியனிற்குட்பட்ட சிந்தாமணி பஞ்.,சில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பஞ்., தலைவர் ராமசுப்பு தலைமை வகித்தார். இதில் நான்குநேரி தாசில்தார் கதிரேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சிந்தாமணி பஞ்.,சிற்குபட்ட பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையில் அனுமதியின்றி சாயப்பட்டறை செயல்பட்டு வருவதாகவும், இதில் திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 15பேர் வேலை செய்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து தாசில்தார் கதிரேசன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது சாயப்பட்டறை செயல்படுவது தெரிய வந்தது.இது குறித்து தாசில்தார், கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் மீரான் மைதீன், சுற்றுச்சூழல் துறை அதிகாரி விஜயபாஸ்கர் மற்றும் வருவாய், சுகாதாரம், சுற்ற்றுச்சூழல் துறை அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.