/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஏரி, குளங்களில் இலவசமாக களிமண் எடுக்க கோரிக்கைஏரி, குளங்களில் இலவசமாக களிமண் எடுக்க கோரிக்கை
ஏரி, குளங்களில் இலவசமாக களிமண் எடுக்க கோரிக்கை
ஏரி, குளங்களில் இலவசமாக களிமண் எடுக்க கோரிக்கை
ஏரி, குளங்களில் இலவசமாக களிமண் எடுக்க கோரிக்கை
ADDED : ஆக 22, 2011 02:05 AM
சென்னை : ஏரி, குளங்களில் மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாகக் களிமண்
எடுக்க, அரசு அனுமதிக்க வேண்டுமென, மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின், மாநில
நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது.
கூட்டத்திற்கு, நாராயணன் தலைமை
வகித்தார். மண்பாண்டத் தொழிற்கூடங்கள் அமைக்கும் போது, இதற்கு மூலப்
பொருளான களிமண் தேவை. ஏரி குளங்களில் இருந்து, மண்பாண்டத் தொழிலாளர்கள்
களிமண் எடுத்து வந்தால் தான், தொழில் செய்ய முடியும். இந்தக் களிமண்ணை
இலவசமாக எடுத்துத் தொழில் செய்வதற்கு, பல தடைகள் ஏற்படுகின்றன.எனவே,
மண்பாண்டத் தொழில் நலிவுற்று, தொழிலாளர்கள் வறுமையில் வாடும் நிலையில்
உள்ளனர். ஏரி, குளங்களில் மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக களிமண் எடுக்க,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள்
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


