/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்விருப்ப மனு பெற அறிவிப்புதாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்விருப்ப மனு பெற அறிவிப்பு
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்விருப்ப மனு பெற அறிவிப்பு
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்விருப்ப மனு பெற அறிவிப்பு
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்விருப்ப மனு பெற அறிவிப்பு
ADDED : செப் 12, 2011 04:05 AM
ஈரோடு: தமிழகத் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சித்
தேர்தலில் போட்டியிட விரும்பவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்படுகிறது.
தமிழகத் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சித்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்ட
உதவிகளையும் லஞ்சமில்லாமல், மக்களுக்கு பெற்று தருபவர்களாகவும், உதவி
செய்வதில் கட்சி பாராதவர்களாகவும், ஜாதி சமயம் பாராதவர்களாகவும்,
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கின்ற நல்ல எண்ணம் கொண்டவராக இருத்தல்
வேண்டும்.
பொது சேவை எண்ணம் கொண்ட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கழக நிறுவனர் தேவராஜனிடம் செப்டம்பர் 15ம்
தேதிக்குள் டி.என்.பாளையம் தலைமைக் கழகத்தில் நேரடியாக மனு தரலாம்.
மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், ஆறாண்டாக கழகத்தில்
செயல்படுபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். இதற்கென எந்த கட்டணமும்
வசூலிக்கப்பட மாட்டாது.போட்டியிடுபவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், கழகத்தில் அங்கம்
வகிப்பவர்களுக்கு கழகம் வெற்றிக்கு செயல்படும், என அமைப்பின் தலைவர்
தேவராஜன் தெரிவித்துள்ளார்.