/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆச்சார்ய நரேந்திர தேவா நினைவாக ஈரோட்டில் விடுதிஆச்சார்ய நரேந்திர தேவா நினைவாக ஈரோட்டில் விடுதி
ஆச்சார்ய நரேந்திர தேவா நினைவாக ஈரோட்டில் விடுதி
ஆச்சார்ய நரேந்திர தேவா நினைவாக ஈரோட்டில் விடுதி
ஆச்சார்ய நரேந்திர தேவா நினைவாக ஈரோட்டில் விடுதி
ADDED : ஆக 15, 2011 02:06 AM
சுதந்திரப் போராட்ட வீரர் ஆச்சார்ய நரேந்திர தேவா நினைவாக ஈரோட்டில் அவரது சிலையுடன் கூடிய விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் ஆச்சார்ய நரேந்திர தேவா, 1889ல் உ.பி., மாநிலம் அயோத்தி அருகே சீதாபுரில் பாபுபல்தேவ் பிரசாத்தின் மகனாக பிறந்தார். முதலில் அவினாசிலால் என, அழைக்கப்பட்டார். அøதொடர்ந்து நரேந்தரதேவா, ஆச்சாரியா என அழைக்கப்பட்டார். 10 வயதில் லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று, தாதா பாய் நவுரோஜியின் விடுதலை பேச்சால் கவரப்பட்டார். மிதவாத தலைவர்களை புறக்கணித்து திலகருக்கு வரவேற்பு கொடுத்தார். சென்ற 1916-21ல் வக்கீல் படித்தார். சுதந்திர போராட்ட ஆர்வத்தாலும், காந்தியடிகளின் ஆணையாலும் வக்கீல் தொழிலை கைவிட்டார். நேருவின் விருப்பப்படி காசி வித்யா பீடத்தை ஏற்றார். தன்னுடைய அனுபவங்களை நூலாக எழுதினார். 1934ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அருணாஅசப் அலி, அச்சுதபட்டவர்மன், கோரே, மாசானி லோகியா ஆகியோருடன் காங்கிரஸ் சோஸலிஸ்ட் குழு உருவாக்கினார். கடந்த 1937ல் தன்னை தேடி வந்த உத்திரபிரதேச முதல்வர் பதவியை தூக்கி எறிந்தார். 1939ல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றார். சிறையில் இருந்து வெளியேறியதும் நோய்வாய்ப்பட்ட அவர், 1942ல் வெள்ளையனே வெறியேறு இயக்க போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் மூன்றாண்டு சிறை சென்றார். இந்தியாவின் கலாச்சார தூதராக 1945ல் சீனாவுக்கு அனுப்பப்பட்டார். சோஸலிஷத்தை வளர்க்கவும், கிராம மேம்பாட்டுக்கும் உழைத்தார். 1948ல் கான்பூரில் நடந்த சோஸலிஷ்ட்கள் மாநாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக லோகியா, தேவாவை பிரிந்தார். 1953 ல் தேவாவையும், ஜெயபிரகாஷ் நாராயணனையும் பதவி ஏற்க நேரு அழைத்தார்; இருவரும் பதவி ஏற்க மறுத்து விட்டனர்.உடல் நலக்குறைவு காரணமாக 1956ல் பெருந்துறை சானிடோரியத்தில் அனுமதிக்கப்பட்டு, ஃபிப்ரவரி 19ம் தேதி ஈரோடு காலிங்கராயன் பயணியர் விடுதியில் இறந்தார். ஆச்சார்ய நரேந்திர தேவா இறந்த விடுதியை நினைவிடமாக மாற்ற வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், அவர் காலமான விடுதி, அவரது நினைவு விடுதியாக அறிவிக்கப்பட்டது. 1989 மே 19 அவரது நினைவு விடுதி திறக்கப்பட்டது. ஆதரவாளர்கள் சிலர் நினைவு கடைப்பிடிப்பர். அதற்கு பிறகு, விடுதிக்கு யாரும் வரமாட்டர். ஆதரவாளர்கள் சிலரும் இறந்ததால் விடுதியை கவனிப்போர் இல்லை. விடுதி பழுதாகி கிடந்தது. தமிழக அரசு சார்பில் விடுதியை புதுப்பிக்க மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விடுதி பழுது பார்க்கும் பணி தற்போது நடக்கிறது. ஆச்சார்ய நரேந்திர தேவா சிலை வைக்கப்பட்டுள்ள அறை மட்டும் தனியிடமாகவும், மற்ற அறைகள் பயணிகள் தங்குவதற்கான வசதியுடன் அமைகிறது.


